Skip to content
Home » கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் தலைவர்கள் பலரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை நிறுவியவரும், சட்டமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வகித்தவரும், மக்களால் ஈர்க்கப்பட்டவருமான அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட நல்ல செயல்கள் இந்தப் பூமி உள்ளவரை மக்களால் போற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.