அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த நிலையில் பாஜகவை ஆதரித்து வந்த ஓபிஎஸ், அந்த கட்சியிடம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றார். இரட்டை இலையை முடக்கலாம் என நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் 4 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். சேலத்தில் நடந்த மோடி பிரசார கூட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் ஓபிஎஸ்சுக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்கப்படும் என அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இது குறித்து இன்று சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் இறுக்கமான நிலையில் காணப்பட்டார்.
ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதால் ஓபிஎஸ் மிகவும் இடைத்தேர்தல் போல வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்து விட்டு ஒதுங்கி விடுவாரா என்ற எதிர்பார்ப்பு இன்று மாலைக்குள் தெரியவரும்.
இதற்கிடையே இன்று மதியம் பேட்டியளித்த அண்ணாமலை, ஓபிஎஸ் அவர்களுடைய முடிவை நான் சொல்வது நன்றாக இருக்காது. அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.