Skip to content
Home » தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

வரும்  நாடாளுடன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழலில், பாஜ தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னைக்கு நேற்று இரவு வந்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சென்னை கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த ஆலோசனையில் மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எல்.முருகன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கிடையே, மத்திய மந்திரிகள் தங்கியிருந்த ஓட்டலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 10.35 மணிக்கு வந்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் குழுவினருடன் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதாவுடனான ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைப்பது உறுதியானதாகவும், இந்த தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தேனி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று  சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜனதா தேர்தல் பணிகள் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று மாநில நிர்வாகிகளுக்கு நேர்தல் பணிகள் தொடர்பாக தேவையான ஆலோசனைகள் வழங்குகிறார்கள். தொடர்ந்து தமிழக பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுகிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி ஏற்படும் என பாஜ தரப்பினர் காத்திருந்தனர். இதனால் அவர்கள் ஓபிஎஸ்சை தவிர்த்து வந்தனர். தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டதால் தற்போது ஓபிஎஸ் தரப்பிற்கு பாஜ க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!