அதிமுக ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, இடைச்செருகல்கள் போல இடையில் வந்தவர்களை அகற்ற வேண்டும் என்றார். கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி மற்றும் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட சுமார் 500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. விரைவில் பொதுக்குழு கூட்டுவது தொடர்பாகவும் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.