எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று அதிமுக வேட்பாளராக தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இது எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை கிடைத்தது ஓபிஎஸ்சுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் அந்த அணியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த கு.ப. கிருஷ்ணன் கூறும்போது, எடப்பாடியும், ஓபிஎஸ்சும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்றார்.
இந்த சந்திப்புக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட ஓபிஎஸ்சை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்தார்.