கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட விரும்பிய அதிமுக, அதற்காக பாஜவிடம் பேசிப்பார்த்தது. பாஜக சீட் ஒதுக்காததால் எடப்பாடி, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி. அன்பரசனை அறிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் அறிவித்த அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.