ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் தென்னரசு அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் தரப்பில் தாங்களும் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பா.ஜ. போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம். இல்லாவிட்டால் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நல்ல செய்தி சொல்வார் என்று கூறினார். எனவே இன்று மாலை ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று டில்லி செல்கிறார். அங்கு கட்சி மேலிடத்தில் ஈரோடு கிழக்குத்தொகுதியில் போட்டியிடுவதா, அல்லது அதிமுக அணியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.