அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
எடப்பாடி கூட்டியுள்ள அவசர செயற்குழு சட்ட விரோதமானது. நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் ஓபிஎஸ் சந்திப்பார். திருச்சி ஜி கார்னரில் வரும் 24ம் தேதி அதிமுக மாநாடு நடத்துகிறோம். அந்த மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எங்கள் தர்ப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சர்வாதிகாரம், பணபலம் உள்ளவர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் வகையில் விதிகளை திருத்தி உள்ளனர். எம்ஜிஆர் வேடத்தில் எடப்பாடியை பார்த்த தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.