எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்,அதிமுக 51 ஆம் ஆண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகியவற்றை சேர்த்து ஓபிஎஸ் தரப்பினர் முப்பெரும் விழாவாக திருச்சியில் வரும் 24ம் தேதி கொண்டாடுகின்றனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் இம்மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி ப்ரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது. ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கு.ப கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோருடன் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வரவில்லை..
