சென்னைக்கு வந்த பிரதமர்மோடியை சென்னை விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிரதமர்மோடி மீண்டும் சென்னை விமானநிலையத்தில்ல் இருந்து மைசூர் செல்வதற்காக இரவு 7.35 மணிக்கு விமானநிலையம் வந்தார். அங்கு அவர் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை 20 நிமிடம் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்துப் பேசினார். விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்துபேச ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பிரதமர் மோடி தங்கியிருந்த அறைக்கு அருகே நின்றுக்கொண்டிருந்த ஓபிஎஸ்சை விமானம் புறப்படும் இடத்தில் காத்திருக்கும்படி அதிகாரிகள் கூறிவிட்டனர். பின்னர் மைசூர் சென்ற பிரதமர் மோடியை விமானநிலையத்தில் கவர்னர் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கோர்ட் தீர்ப்புகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து சாதக3மாக இருப்பதாலும் பொதுச்செயலாளரான அவர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதமருடனான சந்திப்பு தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஓபிஎஸ் நம்பியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி அந்த சந்திப்பை தவிர்த்துள்ளது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது..