முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது தேனி எம்பியாக உள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே 3 ஆண்டுகாலமாக பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்துவரவில்லை என்கிற நிலையில் ரவீந்திரநாத் எம்பி தற்போது விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத்தின் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. விவாகரத்து மனுவில் ரவீந்திரநாத் தரப்பில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதால் அவரது மனைவி ஆனந்தி தரப்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..
- by Authour
