Skip to content

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டம் மாவட்டச் செயலாளர் சந்திரா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எதுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

error: Content is protected !!