திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம பொதுமக்கள் திருச்சி-லால்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.