ஒவ்வொரு ஆண்டின் சட்டமன்ற முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றுவார். அதன்படி இன்று கவர்னர் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது தான் மரபு. ஆனால் இன்று கவர்னர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையில் உள்ள திராவிட மாடல், தமிழ்நாடு என்பது போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டார். தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மரபை மீறி கவர்னர் ரவி நடந்து கொண்டதற்க இன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கணடனம் தெரிவித்தன. இது தொடர்பாக காங்கிரஸ், விசிக, கொங்கு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளுனர் உரையின்போது எதிர்க்கட்சிகள் கவர்னரை எதிர்த்து முழக்கமிட்டனர்.