நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களவை தேர்தலை நல்ல முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. மக்களின் நம்பிக்கையை பெற்று பாஜக 3வது முறை ஆட்சி அமைத்துள்ளது. இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி் உள்ளனர். பொருதாளாதாரத்தில் 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி. நிலையான அரசே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. புதிய தொழில் நுட்பங்களில் இந்தியா முன்னேறி வருகிறது. வரும் நிதிநிதி அறிக்கையில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும். வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். விரைவில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்.
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயம், உற்பத்தி, சேவை ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளுக்கு 3.20 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. நாம் எவ்வளவு தற்சார்பு அடைகிறோமோ அந்த அளவுக்கு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
இயற்கை விவசாயம் பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ அன்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி் வருகிறோம்.
உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு வழங்கி வருகிறது. நாட்டில் 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட உள்ளது. உற்பத்தியின் மையங்களாக வடகிழக்கு மாநிலங்கள் மாறப்போகிறது.
மகளிருக்க அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ( மணிப்பூர் பிரச்னை பற்றி பேசுங்கள் என எதிர்க்கட்சிகள் முழக்கம்) நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க (லக்பதி தீதி)திட்டமிட்டப்பட்டுள்ளது. பெண்களின் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களின் வருவாயை மட்டுமல்ல, அவர்களின் மரியாதையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலை வசதி திட்டத்தின் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. மின்சாரத்தை விற்பனை செய்து வருவாயை பெருக்க சூரியஒளி மின்சக்தி செயல்படுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய 3 வது விமான சந்தைையை இந்தியா வைத்துள்ளது. மாற்று திறனாளிகளுக்கான சாதனங்கள் உள்நாட்டிலேயே மலிவு விலையில் தயாரிக்கப்படுகிறது.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 24ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, உ.பியில் பாதுகாப்புத்துறை தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க கடும் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டள்ளது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளோம்.
சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவில் 125வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் ஈடுபடக்கூடாது. சந்திரயான் திட்டம் நாட்டிற்கு பெருமை. 50 ஆண்டுகளுக்கு முன் ஜூன் 25ம் தேதி(எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது. 370வது பிரிவு காஷ்மீரில் நீக்கப்பட்டதால் அங்கு அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா, பூகம்பம் போன்ற பேரிடர்களில் இருந்து மனித குலத்தை காப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர் இந்தியில் பேசினார். அதன் பிறகு துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் ஜனாதிபதி உரையை ஆங்கிலத்தில் பேசினார்.
ஜனாதிபதி பேசும்போது, நீட் தேர்வு முறைகேடு குறித்து பேசுங்கள் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீட் நீட் என முழக்கமிட்டனர். நெருக்கடி நிலை குறித்தும் ஜனாதிபதி பேசினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.