Skip to content

எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

ஆளுங்கட்சி வரிசை,  சபாநாயகரோடு முடிந்து விட்டதா சட்டமன்றம்? தமிழக சட்டமன்றம் மக்களின் மேடை,   அது திமுக மேடை அல்ல.  சட்டப்பேரவையில் உள்ள கேமராக்கள் இன்றும்  எதிர்க்கட்சி வரிசை மீது திரும்பவில்லை.   எதிர்க்கட்சி வரிசை உங்களை  அவ்வளவு அச்சுறுத்துகிறதா, ஏன் எதிர்க்கட்சிகளை பார்த்து  பயந்து நடுங்குகிறீர்கள். ? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாரைக்காப்பாற்ற   தமிழக அரசு முயற்சி செய்கிறது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை  எந்தவித ஒளிவு மறைவுமின்றி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.  எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளை மக்கள் பார்த்து விடக்கூடாது என அரசு எத்தனிப்பது ஜனநாயக படுகொலை

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

error: Content is protected !!