மணிப்பூர் கலவரம் மற்றும் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 4வது நாளாக இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. மேலும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.