Skip to content
Home » வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் சங்கத்தினர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு இணைந்து கடையடைப்பு செய்து வால்பாறை காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அரசு மசோதாவில் குறிப்பிட்டுள்ள ஆழியார் செக் போஸ்ட் மாலை ஆறு மணி உடன் அடைக்கப்படும்
புதிய கட்டிடங்களுக்கு அனுமதி கிடையாது சுற்றுலா தளங்களுக்கு அனுமதி கிடையாது தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட தடை கட்டிடங்கள் சாலை விரிவாக்கம் செய்ய தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை சுற்றுச்சூழல் மசோதாவில் குறிப்பிட்டுள்ளது, இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து 24 மணி நேரம் வால்பாறை மற்றும் சோலையார் பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்,வால்பாறை வர்த்தக வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெபராஜ் கூறுகையில் வால்பாறை பொதுமக்கள்,வியாபாரிகள் நலன் கருதி இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் சாலை மறியல், உண்ணாவிரதம் நடத்த நேரிடும் என தெரிவித்தார்,இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சிறு வியாபாரிகள்,காட்டேஜ் உரிமையாளர்கள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.