2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. இதனையடுத்து வரும் 19 ம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா நுழைந்தது. 5 முறை கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக கடந்த 2003 ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோத உள்ளது.