Skip to content

திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

  • by Authour

போலி ஆவணம் தயாரித்து   அப்பாவி பொதுமக்களின் நிலங்களை  சிலர் அபகரித்து உள்ளதாக  திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து  திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஆபரேஷன் அகழி என்ற பெயரில்  போலீசார்  அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த  தொழில் அதிபர் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொள்ள வந்தனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் போலீசார் அனுமதிக்கவில்லை.

இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள்12 மணி நேரம் காத்திருந்தும் திறக்கப்படாததால் அன்றும் காத்திருந்தனர்.
பின்னர் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட

நேரம் ஆகியும்,  திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.
மதியம் இரண்டு முப்பது மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 7மணி நேரமாக நடைபெற்றது. மேலும் மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
வீட்டில் உள்ள லாக்கரை திறக்க போலீசார் வலியுறுத்தியபோது, வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் சாவி இல்லை எனக்கூறி  திறக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை அங்கிருந்து தகர்த்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுத்து வந்தனர்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது
தொடர்ந்து காவல் துறைக்கு சொந்தமான மீட்பு வாகன (கிரேன் ) உதவியுடன் லாக்கரை தூக்கி காவல் வாகனத்தில் வைத்து அனுப்பி வைத்தனர். இந்த லாக்கரை நீதிபதி  முன்னிலையில் திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும்  என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடைய நள்ளிரவு 12 மணி கடந்ததை தொடர்ந்து மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் லாக்கரை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!