அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் அஜித் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில் நடிகை ஷாலினி, அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கேஷூவலாக மகனுடன் அஜித் இருக்கும் இந்த போட்டோ தான் இணையத்தில் தற்போது வைரல்.
நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை, ஆஸ்பத்திரியில் இருக்கிறார் எனப் பல்வேறு செய்திகள் கடந்த சில நாட்களாகக் கிளம்பியது. ஆனால், முழு உடல் பரிசோதனைக்காக அவர் சென்றபோது காதுக்குக் கீழே உள்ள நரம்பில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஷாலினி, அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மகன் ஆத்விக் அருகில் அமர்ந்து அவருக்கு கேஷூவலாக ஷூ மாட்டி விடுகிறார் அஜித். இதனைப் பார்த்து ரசிகர்கள் ’ஆல் ஈஸ் வெல்’ என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
வருகிற 18ஆம் தேதி ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதால், அஜித் அதில் பங்கேற்பாரா? என்ன அப்டேட் எனவும் ஷாலினியின் இந்த போஸ்ட்டில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அஜித் பூரண ஓய்வில் இருந்துவிட்டு படப்பிடிப்பிற்கு செல்லட்டும் எனவும் சொல்லி வருகின்றனர்.