Skip to content

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காரிப்பருவத்தில் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01.08.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்யவேண்டும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.

நேரடிநெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை தூற்றி, சாக்குகளில் பிடித்து, எடை வைத்து தைத்து, லாரியில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10/- வீதம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!