ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடைபெறுவதை, தென்னக ரயில்வே சேலம் கோட்ட பொது மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா நேற்று மாலை ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவில் முடிக்க, துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக, குன்னுார் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/ooty-test.jpg)