Skip to content

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு 2 மாதம் தடை

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு  மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை (ஏப்ரல் 1) முதல்  ஜூன் 5-ந்தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!