நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயில், சிறப்பு வழிபாடு நாட்களில் மட்டுமே நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றிருக்கிறது. நீலகிரி மாவட்டம் எப்பநாடு, கடநாடு, சின்னகுன்னூர், பேரகணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள். நேற்றுமுன்தினம் மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். ஆனிக்கல் மாரியம்மன்கோவிலில் கார்த்திகை மாத பூஜை செய்வதற்காக கடநாடு கிராமம், ஜக்கலோரை பகுதியிலிருந்து சுசிலா(56), விமலா(35), சரோஜா(65) மற்றும் வாசுகி(45) ஆகியோர் காரில் சென்றனர். பூஜை முடிந்து தங்களது இல்லத்துக்கு திரும்புவதற்காக கெதறல்லா ஆற்றை கடக்க முற்பட்டபோது, ஐனீஸ் தரைப்பாலத்தின் வழியாக இரவு 7 மணியளவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 4 அதை கடக்க முயன்ற 4 பெண்ளும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீரில் அடித்து செல்லப்பட்ட நபர்களில் விமலா, சரோஜா மற்றும் வாசுகி ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். சுசீலா என்ற பெண் நிலை தடுமாறி தண்ணீர் விழுந்த போது, விமலா, சரோஜா, மற்றும் வாசுகி அவரை தண்ணீரிலிருந்து தூக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், 4 பெண்களுமே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்துள்ளனர்.