நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால், ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில், 30 அடி உயரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெரிய அளவில் ஏற்பட்ட மண்சரிவால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ இத்தலார் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த இரு ஆண்டுக்கு முன்பு இதே போன்று பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டதால், குடியிருப்புகளுக்கு தற்போது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மீண்டும்
எழுந்துள்ளது. இதனால், இப்பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’
சென்ற நிதியாண்டில் தடுப்புச்சுவர் கட்ட தொடங்கிய நிலையில் நிதி போதவில்லை என்று இத்திட்டம் இடடையில் நிறுத்தப்பட்டது.கட்டடம் கட்ட பூமியை சரி செய்கிறோம் என்று பாதுகாப்பாக இருந்த மண் திட்டுக் களையும் சமன் செய்து விட்டு தற்பொழுது பொது மக்களை நடு தெருவில் நிறுத்தி விட்டது
.தற்பொழுது இடிந்த ஏரியின் அடிபாகத்தில் நீர் ஊற்றுப் போல் வந்துக் கொண்டுள்ளது.தயவுச் செய்து போர்க் கால நடவடிக்கையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்.இடையில் கட்டத்தை நிறுத்தாதீர்கள் என்று பலமுறை இத்தலார் ஊர் சார்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் மனு அளித்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை
.எந்த அசம்பாவிதமும் நடைப்பெறாமுன் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.