புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் பேசினர். இதே போல அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அடிப்படை பணியிடங்களில் பதவி உயர்வினை வழங்க மறுக்கும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை(பொது) கண்டித்தும், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு அரசால் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மாவட்ட நிர்வாகத்தில் பணி நியமன ஆணை வழங்க நீண்ட காலதாமதம் செய்வதை கண்டித்தும், முக்கிய பணிகளுக்கு புதிய பணியிடத்திற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி பணியிடங்கள் பெற்றும் பணியிடங்களை நியமிக்காமல் மாற்றுப் பணி என்ற பெயரில் பல மாதங்களாக பணிபுரிய வைப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.