கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை வழங்கினார்.அதே போல பணியாளர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,நீண்டகால கோரிக்கையான பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணியானை வழங்கப்பட்டது.பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்துகள் 40 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 68சதவீதம் பயணிக்கப்பட்டு வருகிறது.மாநில அரசு நிதியில் இருந்து விரைவில் 2 ஆயிரம் பேருந்து வாங்கப்பட உள்ளது.போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஆன்லைன் விண்ணப்பம் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது.
57, இருக்கையாக இருந்த அரசு பேருந்து உட்காருவதற்கு இடையூறு இல்லாத அளவில் தற்போது புனரமைக்கப்படும் பேருந்துகளில் 52 இருக்கைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 1400 பேருந்து புனரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.20000 பேருந்துகள் போடப்பட்டு வருகிறது இதில் கடந்த காலங்களில் 7 ஆயிரம் பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. இலவச பேருந்துகளில் நடத்துனர் மீது குற்றச்சாற்று குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தவறை புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
