சென்னை சைதாப்பேட்டையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் . இவர் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்துள்ளார். கேட்டரிங் வேலைக்கு செல்லும் ஆகாஷ் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்துள்ளார். விரக்தியில் இருந்து அகாஷ் வீட்டின் மொட்டை மாடியில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.