தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் ரவி 4 மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த நிலையில் அதை திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அப்போது ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன, அதற்கு கவர்னர் எவ்வாறு தடையாக இருக்கிறார் என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிப்பார் என தெரிகிறது. நாளை சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.