தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில் இந்த தடை மசோதாவை தமிழக அரசுக்கே கவர்னர் ரவி இன்று திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாவில் கூடுதல் விளக்கம் கேட்டு, அவர் திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 4 மாதம் 11 நாள் கழித்து மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.