அரியலூர் மாவட்டம், அரியலூர் ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர்(35/23), இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்குகளை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூபாய் 12,47,000/-பணத்தை செலுத்தி ஏமாந்ததை உணர்ந்தார். இதனையடுத்து போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் 26.09.2023 வழக்கு பதிவு
செய்யப்பட்டது. இதனையடுத்து வங்கியில் பண பரிவர்த்தனை மற்றும் போனை ஆய்வு செய்தனர். இதில்
தஞ்சை பண மோசடி செய்த நபர் தஞ்சை மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று தஞ்சாவூர் மாவட்டம் சென்று மாலிக் (35/23) தெற்கு முஸ்லிம் தெரு, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் Alfa 3i Infotech என்ற Data entry நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் டெலிகிராம் மூலம் அறிமுகமான மகாராஷ்டிராவை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சில நபர்களை வேலைக்கு சேர்த்ததாகவும், அந்த நபர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை துவங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாலிக் குற்றச் செயலுக்காக பயன்படுத்திய செல்போன்-04, சிம்கார்டுகள்-15 ஏடிஎம் கார்டுகள்-08 காசோலை புத்தகம் – 01, இருசக்கர வாகனம்-01 மற்றும் ரொக்கம் ரூ.2,50,000/- ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியான மாலிக்கை அரியலூருக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதில் இவர் ஒரு தொகை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை அனுப்பிய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இது தலைமையாக செயல்பட்டுள்ள மும்பை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.