தஞ்சாவூர், கீழவாசல், முள்ளு கார தெருவை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் கார்த்திகேயன் ( 48 ). இவர் பூண்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கரிகார் சோழன் மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கார்த்திகேயனை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடமிருந்த பதிவு நோட்டுகள், செல்ஃபோன், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
