நாகப்படிணத்திலிருந்து காரைக்கால் வழியாக சென்னை நோக்கி தனியார் ஏசி சொகுசு பேருந்திற்கு ஆன்லைன்மூலம் பதிவுசெய்தவர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து வராததால் காரைக்கால்வரை வேனில் அழைத்துவந்த நிர்வாகம் அங்கிருந்து ஏசி வேலை செய்யாத பஸ்சில் ஏற்றிச் சென்றது. மூச்சு திணறியது ஏற்கனவே பயன்படுத்திய பெட்சீட், பேருந்தின் எஞ்சின் சத்தம் பயணிகள் காதை பிளந்தது. இதுபற்றிகேட்டதற்கு ஒட்டுனர் மதனிடம் சரியான பதில் இல்லை. ஆனால் ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டிச்
சென்றார். உடனடியாக செம்பனார்கோவில் காவல்நிலையத்திற்கு பேருந்தை ஓட்ட வற்புறுத்தினர். அங்கே காவல்ஆய்வாளர் கருணாகரனிடம் புகார் தெரிவித்தனர், 20பயணிகள் 5 மணிநேரம் தாமதமாகியதால் கட்டணத்தை திருப்பி அளிக்க போலீசார் தெரிவித்ததன்பேரில் ரூ.16 ஆயிரம் வழங்கப்பட்டது, மாற்று பேருந்து மூலம் அனைவரும் சென்னை சென்றனர்.