Skip to content

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும் தான் யு.கே.வில் இயங்கி வரும் ஐஸ்போர்ட்ஸ் டிரேடர் என்ற டிரேடிங் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுடன் சேர்ந்து ஐஸ்போர்ட்ஸ் டிரேடர்.காம் என்ற வெப்சைட் மூலம் மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் டிரேடிங் செய்தால் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி நம்பவைத்துள்ளார். மேலும் பணத்தை வைத்து உண்மையாக டிரேடிங் செய்வது போன்ற தோற்றத்தினை மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் காண்பித்துள்ளார். ஆனால் அவர், தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்துள்ளார். இதனால் மீதமுள்ள தொகையாவது எடுக்க ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கும் பல சேவை கட்டணம், வரி தொகை என பல காரணங்களை கூறி ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் மோசடியாக பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

செய்திகள் மாவட்ட செய்திகள் சினிமா விளையாட்டு மத்திய பட்ஜெட் – 2023 தேவதை புதுச்சேரி பெங்களூரு மும்பை ஜோதிடம் ஆன்மிகம் தலையங்கம் இ-பேப்பர் புகார் பெட்டி ஸ்பெஷல்ஸ் உங்கள் முகவரி மணப்பந்தல் DT Apps செவ்வாய்க்கிழமை, மார்ச் 21, 2023 முகப்புசெய்திகள்மாநில செய்திகள் மோசடியில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது தினத்தந்தி மார்ச் 21, 12:22 am ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்களை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். கரூர் ஆன்லைன் மோசடி கரூரை சேர்ந்த ஸ்டாலின் (24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும் தான் யு.கே.வில் இயங்கி வரும் ஐஸ்போர்ட்ஸ் டிரேடர் என்ற டிரேடிங் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுடன் சேர்ந்து ஐஸ்போர்ட்ஸ் டிரேடர்.காம் என்ற வெப்சைட் மூலம் மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் டிரேடிங் செய்தால் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி நம்பவைத்துள்ளார். மேலும் பணத்தை வைத்து உண்மையாக டிரேடிங் செய்வது போன்ற தோற்றத்தினை மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் காண்பித்துள்ளார். ஆனால் அவர், தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்துள்ளார். இதனால் மீதமுள்ள தொகையாவது எடுக்க ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கும் பல சேவை கட்டணம், வரி தொகை என பல காரணங்களை கூறி ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் மோசடியாக பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்டாலின் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுத்தார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்நாடக மாநிலத்தினை சேர்ந்த தனியார் கம்பெனியின் அக்கவுண்ட்டிற்கு பணம் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுபடி கரூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு சென்று இந்த தனியார் கம்பெனியின் இயக்குனர்களான பிரவீன்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோரின் செல்போன் எண் இருப்பிடத்தை வைத்து கே.ஆர்.புரம், பெங்களூரு என்ற முகவரிக்கு சென்று விசாரித்தனர். இதில் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பிரவீன்குமார் நண்பர் விஷால்பவார் என்பவர் கொடுத்த யோசனையின்படி இவர்கள் வெளிநாட்டு கம்பெனியில் வேலைபார்க்கும் போரிஸ் என்பவருடன் சேர்ந்து மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷன் மூலம் பொதுமக்களை கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்ய வைத்து அதன் மூலம் டிரேடிங் செய்து அதில் லாபம் சம்பாதிப்பது போன்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதில் வெளிநாட்டு கம்பெனியின் சேல்ஸ் டீம் பொதுமக்களிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி இவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை போட செய்வார்கள் எனவும், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு ஈடாக மடா அப்ளிகேஷனில் கிரிப்டோ கரன்சிகளை காண்பித்து, பின்னர் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை வைத்து, இவர்கள் குறைவான விலைக்கு கிரிப்டோ கரன்சிகளை வாங்கி போரிஸ் போன்ற வெளிநாட்டினர் சொல்லும் வாலட்டிற்கு தங்களது கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதம் உள்ளவற்றை அனுப்பிவிடுவார்கள் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து பிரவீன்குமார் (வயது 29), விஷால்பவார் (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பணமும், குற்ற செயலுக்கு பயன்படுத்திய வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள், கிரிடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!