தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து, சட்டமுன் வடிவு தயாரிக்கப்பட்டது. இது தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்ட முன்வடிவுக்கு இதுவரை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக சிபிசிஐடி போலீசார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். டிரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கல் ரம்மி, பப்ஜி, லுடோ ஆகிய ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பலர் உயிரிழந்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
