இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 1 நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ்வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கூறியது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஹெட் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்மித்(22), லபுசேன்(15), ஜோஸ்(26) ரன்களில் நடையை கட்டினர்.மார்ஸ் மட்டும் 81 ரன்கள் எடுத்தார்.
35.4 ஓவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக், குல்தீப் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்தியா அடுத்து பேட் செய்ய உள்ளது.