மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்படும். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029 முதல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.