சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இன்று மதியம் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ததும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆதரவு தெரிவித்தது.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
மாநிலங்களவையில் 3ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் எப்படி இதனை கொண்டு வருகிறீர்கள். இதை ஆரம்பத்திலேயே எதிர்க்கிறோம். ஒரு அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. இதன் மூலம் ரூ.13ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இது சாத்தியமில்லாத மசோதா. இது அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவதற்திற்கும் எதிரானது. எனவே இதனை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் ஆதரவு தெரிவித்து பேசியதால் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதா கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்படும் என்றார்.