ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பகல் 12 மணிக்கு மசோதாவை தாக்கல் செய்து பேச உள்ளார். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இருக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அவர்கள் தற்போது 3 நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்றுள்ளார். இன்று டெல்லி திரும்பும் அவர், அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜனதாவின் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.