Skip to content
Home » மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). கடந்த மாதம் 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு  தனது மகனின் திருமண அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில்  சென்று கொண்டிருந்தார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது  அவரை காரில் இருந்தவர்களே கொலை செய்து விட்டனர்.

கூடுவாஞ்சேரி போலீசார் இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் செல்போன் உரையாடல் குறித்து விசாரித்த போது மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது தம்பியான கவுசே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும் 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை (மஸ்தான்) கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கொசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆதம்பாஷா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *