Skip to content

நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான  நடிகர் எஸ்.வி.  சேகர்,  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த சம்பவம் 2018ல் நடந்தது.  இது தொடர்பாக  பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை  எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வழக்கை விசாரிக்கும்  சிறப்பு கோர்ட்டு விசாரித்து எஸ்.வி. சேகருக்கு  கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம்,  1 மாத சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும்  விதித்து  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.வி. சேகர், சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறப்பு கோர்ட்  விதித்த 1 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாத காலம் அவகாசமும் வழங்கப்பட்டது.