Skip to content

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தார்.  உடனடியாக அவரை  ஆம்புலன்ஸ்  மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ரகமத்துல்லா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.  இது  குறித்து புதுக்கோட்டை  போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!