ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தினால் தங்களுக்கு லாபம் என்பதால் அதை செயல்படுத்த பா.ஜ.,நினைக்கிறது என்று எம்.பி.,கனிமொழி குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடந்தது. இதில் கலந்துக்கொண்ட எம்.பி., கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருவதால், மாநிலங்களுக்கான உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க வேண்டும் என பா.ஜ.,அரசு செயல்படுகிறது.
தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தலால், மக்களுக்கு இதனால் என்ன பயன்?, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் முடிவு பெறாத அரசின் நிலை என்ன? என்பது இல்லாமல், தங்களுக்கு லாபம் தரக்கூடிய ஒன்றை செயல்படுத்த பா.ஜ.,நினைக்கிறது.
மேலும், தங்களின் கருத்துக்களை நாடு முழுவதும் திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜ., இருக்கிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க.,வும் எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறது. ஜனநாயகத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக இருப்பதை தி.மு.க., ஏற்றுக்கொள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.