பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, தேனி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் கட்டுமானம் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது ஏற்கனவே சிஎம்டிஏ சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரிக்க 2 நாள் போலீஸ் கஸ்டடி கேட்டு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்காக இன்று சவுக்கு எழும்பூர் கோா்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் மீண்டும் இன்று மாலை அவரை கோா்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.