Skip to content
Home » ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

  • by Senthil

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது…. கடந்த ஆண்டு தொகுதி மேம்பாடு நிதியில் ஒதுக்கட்டு தற்போது பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள், ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒன்றிய அரசு தன்னுடைய விசாரணை அமைப்புகள் மூலமாக ஒரு தீவிரவாதியை போல, 17 மணி நேரம் அடைத்து வைத்து முறையற்ற விசாரணையை செய்து, அவர் உடல் நலம் பாதிக்கும் அளவில் நடந்த கொண்டதற்கு கோவை மாவட்ட மக்கள் சாரபில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஒரு அமைச்சராக இருப்பவர், முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறேன் என தெரிவித்தும் அவரை உடை மாற்ற கூட அனுமதிக்காமல் இந்த நிலையில் வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமைச்சர் பதவியில் உள்ளவர் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் அவர் குற்றவாளி என நீதிமன்ற சொல்லும் வரை எந்த பதவியிலும் நீடிக்கலாம். அவ்வாறு எந்த நீதிபதியும் தெரிவிப்பதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநிலத்தில் அமைச்சரை தீர்மானிப்பது முதல்வரை சாரந்தது. ஆளுநரை சார்ந்தது அல்ல. ஆகவே ஆளுநரின் அத்துமீறல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விசாரணை அமைப்புகளின் தொடர் சித்திரவதை குறிப்பாக எதிர்கட்சிகளை ஆளும் மாநிலத்தில் தான் இவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். பாஜக ஆளும் இடங்களில் இந்த விசாரணை நடக்காது. மேலும் தொடரந்து 20 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை, காரணம் அதானி மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என கேட்டோம் அதன் காரணமாக முடக்கப்பட்டது. கடந்த காலத்திலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 31 பேர. கொண்ட இந்த குழுவில் 18 பேர் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள், ஆனால் அதானி பெயரை நாடாளுமன்றத்தில் எந்த ஆவணங்களிலும் வரக்கூடாது என பார்க்கிறார்கள்.

அதே போல ராகுல் பேச்சுகள் குறிப்பில் இருந்து அப்புறபடுத்தினார்கள், காரணம் பல இடங்களில் அதானி பெயர் பயன்படுத்தப்பட்டதால், இது எந்த மாதிரியான ஜனநாயகம் என தெரியவில்லைஓ மொரீசியஸ் தீவில் இருந்து ஒரே இரவில் 20 ஆயிரம் கோடி அதானி நிறுவனத்திறகு மாறியுள்ளது. பணம் யாருடையது, ஏன் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை முற்றிலும் அரசியல் நடவடிக்கை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!