அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எங்களது தலைவர் மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார் அதற்கான தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம் அதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
திமுக உடனான விடுதலை சிறுத்தைகளின் தொகுதி பங்கீடு நாளை முடிவடையும் என நினைக்கிறேன். எம்ஜிஆர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரவிக்குமார்….. மோடி எதிர்க்கட்சியை சேர்ந்தவர் தேர்தலை சந்திப்பதற்காக அவர் எது வேண்டும் என்றாலும் பேசுவார் அவரது கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை பல்வேறு விதங்களில் தூற்றினார்.
அதனால் தான் கூட்டணியும் உடைந்தது ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார். இதில் யார் சொல்வது உண்மை என தெரியவில்லை மோடி சொல்வது உண்மை என்றால் அண்ணாமலை கருத்து ஏற்கத்தக்கது அல்ல என சொல்கிறாரா என்பது தெரிய தெரியவில்லை வாக்கு வேண்டும் என்பதற்காக பல்வேறு கருத்துகளை மோடி சொல்கிறார் அவரது கருத்து வாக்கிற்காக சொல்லும் கருத்து அதில் உண்மை இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னால் குடியரசு தலைவரிடம் இத்திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கூறியுள்ளோம் இது தேர்தலை ஒழித்துக்கட்டும் திட்டமாகும் அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்கும் திட்டமாகும் இது தேர்தல் நடத்தும் திட்டம் என்று ஏமாந்து விடக்கூடாது இத்திட்டம் அதிபர் ஆட்சிக்கு கொண்டு போகும் திட்டமாகும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் அதன் பிறகு தேர்தலை நடைபெறாது என்பதை ஒவ்வொரு வாக்காளரும் நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார்.