மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (39 )என்ற பயணியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்துள்ளனர்.
