Skip to content
Home » ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில், தனது நாட்டு மக்களைக் காண வருவதாகவும், அந்த நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே, கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். மகாபலி மன்னனை வரவேற்க, மக்கள் தங்களின் வீட்டு

வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளில் படையலிட்டு வழிபடுவது வழக்கம். கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியது இந்த நிலையில் கற்பகம் கல்லூரியில் மாணவ மாணவியர் கேரள பாரம்பரிய உடை அணிந்தும் செண்டை மேளம் அடித்து கல்லூரியில் பூ கோலம் இட்டு மகாராஜாவை அழைத்து சென்று நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!