திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது குறித்து சோமரசம்பேட்டையில் இன்று ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் தாமோதரன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ராசு ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, அண்ணாவி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செல்வராசு, மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர்,மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,மாணவரணி செயலாளர் அறிவழகன்,இளைஞர் அணி தேவா, புங்கனூர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் மொத்த கருப்பன், ஜெயக்குமார் கோப்பு நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.